அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு பயஸ் - பூரவ் ராஜா ஜோடி முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் நாக்ஸ்வில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி வெற்றி பெற்றது.
அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு பயஸ் - பூரவ் ராஜா ஜோடி முன்னேற்றம்
Published on

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, பிரட்டனின் மார்கஸ் வில்லிஸ் - லியாம் பிராடே ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது செட்டையும் 6-0 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி அடுத்த சுற்று போட்டியில் மூன்றாம் நிலை ஜோடியான தென்னாப்பிரிக்காவின் ருவான் ரொயிலொஃப்ஸ் - பிரட்டனின் ஜோ சலிஸ்பரியை எதிர்கொள்ள இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com