அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பயஸ் - பூரவ் ராஜா ஜோடி முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் நாக்ஸ்வில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி வெற்றி பெற்றது.
அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பயஸ் - பூரவ் ராஜா ஜோடி முன்னேற்றம்
Published on

நாக்ஸ்வில்:

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, மூன்றாம் நிலை ஜோடியான தென்னாப்பிரிக்காவின் ருவான் ரொயிலொஃப்ஸ் - பிரட்டனின் ஜோ சலிஸ்பரி ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் முதல் செட்டை 7-6 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஜோடி இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை ஜோடியான அமெரிக்காவின் ஜேம்ஸ் செர்ரேடானி - ஆஸ்திரேலியாவின் ஜான்-பாட்ரிக் ஸ்மித்தை எதிர்கொள்ள இருக்கிறது.

ஜப்பானில் நடைபெற்ற ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - இந்தோனேசியாவின் கிரிஸ்டோபெர் ரங்கட் ஜோடி, ஜப்பானின் பென் மெக்லச்லென் - யசுடாகா யுசியாமா ஜோடியுடன் மோதியது. இப்போட்டியில் ஜப்பான் ஜோடி 4-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் நெடுஞ்செழியன் - ரங்கட் ஜோடியை  வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com