ஆங்கில புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து

புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
வைகோ- விஜயகாந்த்
வைகோ- விஜயகாந்த்
Published on

சென்னை:

புத்தாண்டை யொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நம் இந்திய நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்.

வரும் 2020-ம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்து வாழ்வாங்கு வாழ வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.தி.மு.க. கட்சி பொதுச் செயலாளர் வைகோ:-

புத்தாயிரம் ஆண்டு தொடக்கம் என்பது போல ஒரு தலைமுறையைக் குறிக்கின்ற பத்தாவது ஆண்டில் நிறைவு ஆண்டாக மலர்கின்றது 2020. நம்பிக்கை யோடு வரவேற்கின்றோம். கடந்துபோன ஆண்டில் நிகழ்வுகளும், பதிவுகளும் சந்திக்கப் போகின்ற ஆண்டுக்கு நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ள உதவிடும்.

எந்நாளும் துன்பத்தில் உழல்கின்ற விவசாயப் பெருமக்களுக்கு வருகின்ற காலம் துயர்துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள் கின்றேன்.

டி.டி.வி.தினகரன்:-

புத்தம் புதிய நம்பிக்கை களுடனும், உற்சாகத்துடனும் பிறக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண்மையும் தொழில்களும் செழித்திடவும், உழைக்கின்ற அத்தனை மக்களும் உயர்வினைப் பெற்றிடவும் உகந்த சூழல் உருவாகட்டும். மொத்தத்தில் புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சி யையும் தருகிற வளமான ஆண்டாக திகழட்டும் என வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜிகேவாசன்:- 

தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் கள் மேம்படவும், வேலை வாய்ப்புகள் பெருகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிப வர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், நீண்டகால பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படவும் இப்புத்தாண்டு வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர்:-

புத்தாண்டில் நாம் மேற்கொள்ளும் சுய வளர்ச்சி சார்ந்த சபதங்களோடு, இந்த சமூகமும் தேசமும் வளமாகவும், மகிழ்ச்சி யாகவும் திகழ வேண்டும் என்ற சபதத்தையும் மேற்கொள்வதே புதிய வரலாறுகளை படைப்பதற்கான பாதையாக அமையும். அந்த உன்னதமான நோக்கத்தோடு புத்தாண்டை எதிர் கொள்வோம்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், பாரிவேந்தர் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி. சந்தோ‌ஷம், பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவமக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சைமுத்து, ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com