தங்கம் கடத்தல் வழக்கு - பினராயி விஜயன் பதவிவிலக வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் உண்ணாவிரதம்

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
உண்ணாவிரதம் இருக்கும் ரமேஷ் சென்னிதலா
உண்ணாவிரதம் இருக்கும் ரமேஷ் சென்னிதலா
Published on

திருவனந்தபுரம்:

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் கைப்பற்றினர். இது தொடர்பாக தூதரக முன்னாள் அதிகாரி சரித் என்பவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதில் முன்னாள் தூதரக அதிகாரியும், மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷ் உள்பட மேலும் 3 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் இந்த கடத்தல் விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தனது வீட்டில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com