மதுரையில் வக்கீல் கொலை- மேலும் 3 பேர் கைது

மதுரையில் வக்கீலை அடித்துக்கொன்ற வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாகமலைபுதுக்கோட்டை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழரத வீதியை சேர்ந்தவர் சாக்ரடீஸ். வக்கீலான அவர் திருச்சியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சாக்ரடீஸ் மதுரை வந்தார். அப்போது மதுரை காளவாசல் சொக்கலிங்கநகரை சேர்ந்த நண்பரான செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சாக்ரடீசை அடித்துக்கொன்று, பின்னர் பிணத்தை துவரிமான் வைகை ஆற்றின் கரையோரத்தில் வீசிச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், செந்தில்குமார் மனைவி ரம்யா, செந்தில்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தனது மனைவி பிரிந்து சென்றதற்கு சாக்ரடீஸ்தான் காரணம் என்ற எண்ணத்தில் செந்தில்குமார் இருந்து வந்துள்ளார். எனவே கோர்ட்டில் ஆஜராவதற்காக மதுரை வந்த சாக்ரடீசை, செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய செந்தில்குமாரின் நண்பர்கள் சம்மட்டிபுரம் சையது ஜாபர் அலி(வயது 37), சொக்கலிங்க நகர் பிரகாஷ் (32), பைபாஸ் ரோடு விக்னேஷ்(29) ஆகியோரை நேற்று நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com