தெலுங்கானா: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனைவியுடன் கொடூரமாக குத்திக்கொலை

தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனைவியுடன் தேசிய நெடுஞ்சாலையில் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட தம்பதி
கொலை செய்யப்பட்ட தம்பதி
Published on

தெலுங்கானா மாநிலம் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர் வாமன் ராவ். இவரும், இவரது மனைவி நாகமணியும் ஐதராபாத்தில் இருந்து அவர்களது சொந்த ஊரான மந்தானி என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பெட்டாபள்ளி மாவட்டம் கல்வாசார்லா நெடுஞ்சாலையில் கும்பலால் தாக்குப்பட்டு கொடூரமான கொலைசெய்யப்பட்டுள்ளனர். காருக்குள் வைத்தே இருவரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வானம் ராவ் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இன்று மதியம் நடைபெற்றுள்ளது. இருவரது உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெட்டாபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com