நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி- வக்கீல் கைது

நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றியதாக வக்கீல் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

நாமக்கல்:

நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றியதாக வக்கீல் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் , முசிறியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (35). வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவர் முட்டாஞ்செட்டியை சேர்ந்த சத்துணவு உதவியாளர் கனிமொழி என்பவரிடம் அவரது மகனுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சொன்னபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து கனிமொழி நாமக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் வக்கீல் சதீஸ்குமார் கனிமொழி உள்பட 11 பேரிடம் சென்னை உயர்நீதி மன்றத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com