

அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டி மற்றும் டேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது விளையாட்டு வீராங்கனைகள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர்.
கெய்டி கில்பர்ட், மேன்டி மெலூன், ஆம்பர் மீன்ஸ் மற்றும் கேபி ஜோஸ்வின் ஆகிய 4 வீராங்கனைகள் கொலரடோ பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில் அமெரிக்க ஒலிம்பிக் டேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸ், அவரது தம்பி ஸ்டீவன் ஆகியோர் தங்களிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். ஸ்டீவன் 2 தடவை ஒலிம்பிக் சாம்பியன் ஆவார்.
வழக்கு தொடர்ந்த வீராங்கனைகளில் ஒருவரான மெலோன் 2 தடவை உலக சாம்பியன் ஆவார். எகிப்தில் 1997-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ஜீன் தன்னை கற்பழித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு வயது 15.
மற்றொரு வீராங்கனையான கில்பர்ட் கூறிய புகாரில், 2002-ம் ஆண்டு ஈகுவேடரிலும், 2003-ம் ஆன்டு ஜெர்மனியிலும் பயிற்சியாளர் ஜீன் தன்னுடன் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஜீன் லோபஸ் சகோதரர்களின் ‘செக்ஸ்’ வெறிக்கு இணங்காத வீராங்கனைகள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் அல்லது சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.