ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் விழுந்தது தமிழகத்திற்கே துயரமான சம்பவம் - லதா ரஜினிகாந்த்

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் விழுந்தது தமிழகத்திற்கே துயரமான சம்பவம் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருச்சியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தமிழகத்திற்கே துயரமான சம்பவம். சுர்ஜித் எப்போது மீட்கப்படுவான் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை ஏற்படுத்த வேண்டும். 

குழந்தைகள் பாதுகாப்புக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்காக மாநில அரசுகளும் தனிக்குழுவை அமைக்க வேண்டும்.

எந்தச் சட்டத்தை கொண்டு வந்தாலும் அதன் மூலம் வரும் வரியை குழந்தைகளுக்காக எழுத வேண்டும். குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com