இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லி வருகை

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லிக்கு இன்று வருகை தந்தார். #ranilwickremesinghe
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லி வருகை
Published on

புதுடெல்லி:

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று இரவு டெல்லிக்கு வருகை தந்தார்.

இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பயணம் அமையும் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

மேலும், வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை ரணில் விக்கிரம சிங்கே சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபரை கொல்ல இந்திய அமைப்பு ரா சதி செய்துள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லிக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ranilwickremesinghe

X

Maalai Malar
www.maalaimalar.com