பெண் போலீஸ் கற்பழிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரி போலீசில் கோர்ட்டில் சரண்

பெண் காவலரை கற்பழித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரி சச்சா சிங் லங்கா இன்று குருதாஸ்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
பெண் போலீஸ் கற்பழிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரி போலீசில் கோர்ட்டில் சரண்
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக பதவிவகித்த சச்சா சிங் லங்கா கடந்த 2009-ம் ஆண்டுவாக்கில் தன்னை பலமூறை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக பெண் போலீஸ் ஒருவர் குருதாஸ்பூர் நகர போலீசில் புகார் அளித்திருந்தார். இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகளையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, முன்னாள் மந்திரியை கைது செய்ய போலீசார் தேடிவந்த நிலையில் தனக்கு முன் ஜாமின் கோரி சச்சா சிங் லங்கா பஞ்சாப் - அரியானா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம், குருதாஸ்பூர் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, சச்சா சிங் லங்கா இன்று குருதாஸ்பூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com