நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

குருபரப்பள்ளி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிப்பாறையை சேர்ந்த பெரியண்ணன் மனைவி வேடியம்மாள்(30).  இந்நிலையில் இவரது உறவினரான டிரைவர் பெரியசாமி(38) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஏற்பட்ட நிலதகராறில், வேடியம்மாளை, பெரியசாமி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த வேடியம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸ் எஸ்எஸ்ஐ சிவக்குமார் வழக்குபதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com