அரிவாள் வெட்டு
செய்திகள்
திண்டுக்கல் அருகே இடப்பிரச்சினையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
இடப்பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள அச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சக்திவேல் (34) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த செந்தில்குமாரை வீராச்சாமி மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகியோர் கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த செந்தில்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

