அரக்கோணம் அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

அரக்கோணம் அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த தந்தைr, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு
தீர்ப்பு
Published on

ராணிப்பேட்டை:

அரக்கோணம் அடுத்த வேடல் கோட்ட கண்டிகை ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது(60). இவரது மகன் வெங்கடேசன் (28) ஆகியோருக்கும் அரக்கோணம் அடுத்த வேடல்வழி கோட்ட கண்டிகை கிராமத்தை சேர்ந்த மோகன்ரெட்டி (60) விவசாயி என்பவருக்கும் இடையே புறம்போக்கு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோர் மோகன் ரெட்டியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேசன், ஆறுமுகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சீனிவாசன் கொலையாளிகள் மகனுமான ஆறுமுகம், வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ 7,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆஜராகியிருந்தார். வெங்கடேனுக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com