கள்ளப்பெரம்பூரில் இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது

தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூரில் இடத்தகராறில் முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் 2-ம் சேத்தி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது70). விவசாயி. இவர் வீட்டின் அருகே வசிப்பவர் சங்கர் என்கிற எழிலரசன்(32). 

இவர்கள் இருவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் கடைத்தெருவுக்கு வந்த போது, அங்கு நின்றிருந்த எழிலரசன் அரிவாளால் செல்வராஜை வெட்டி விட்டு தப்பியோடி விட்டாராம்.

இதில் படுகாயமடைந்த செல்வராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் என்கிற எழிலரசனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com