ஆண்டிப்பட்டி அருகே ஆட்டுக்குட்டிகளை திருடிய சிறுவன் கைது

ஆண்டிப்பட்டி அருகே ஆட்டுக்குட்டிகளை திருடி விற்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள புது ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து கிடை போட்டுள்ளார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான 13 ஆட்டுக்குட்டிகளை கிடையில் வைத்து விட்டு பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

மீண்டும் மாலையில் திரும்பி வந்த போது 3 ஆட்டுக்குட்டிகள் திருடு போயிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் மயிலாடும் பாறையைச் சேர்ந்த ரவி மகன் பிரேம்குமார் (வயது 17) என்பர் ஆட்டுக்குட்டிகளை திருடி சமத்துவபுரத்தில் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆட்டுக்குட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் பிரேம்குமாரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com