மகன் திருமணத்தில் பங்கேற்க 5 நாள் பரோல் - ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு மனு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், தனது மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக 5 நாள் பரோல் கோரியுள்ளார். #fodderscamcases #Laluseeksparole
மகன் திருமணத்தில் பங்கேற்க 5 நாள் பரோல் - ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு மனு
Published on

ராஞ்சி:

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் தண்டனை பெற்று வருகிறார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜார்கண்ட்டில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ்வுக்கு வருகிற 12-ம் தேதி பாட்னாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மே 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாள் பரோல் வேண்டி லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். #fodderscamcases #Laluseeksparole

X

Maalai Malar
www.maalaimalar.com