சிகிச்சைக்காக மீண்டும் மும்பை வந்தார் லாலு - ஆசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதி

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் இன்று மீண்டும் மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #LaluarrivesMumbai #LaluatAsianHeartInstitute
சிகிச்சைக்காக மீண்டும் மும்பை வந்தார் லாலு - ஆசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதி
Published on

மும்பை:

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். 

மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த  8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் இன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். #LaluarrivesMumbai  #LaluatAsianHeartInstitute 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com