மும்பை ஆஸ்பத்திரியில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி

பாட்னாவில் இருந்து சிகிச்சைக்காக இன்று மும்பை வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் திடீர் நெஞ்சு வலியால் ஆசியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை ஆஸ்பத்திரியில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி
Published on

பாட்னா:

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கடந்த மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக இன்று பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.

மகள் மிசா பாரதி மற்றும் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் அவருடன் சென்றனர். மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் இன்று மாலை லாலு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. #Lalu #Laluadmit #MumbaiHospital #AsianHeartInstitute 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com