லாலுவுக்கு ஜாமீனை ஜூலை 3 வரை நீட்டித்தது ராஞ்சி உயர் நீதிமன்றம்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ராஞ்சி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #LaluBail
லாலுவுக்கு ஜாமீனை ஜூலை 3 வரை நீட்டித்தது ராஞ்சி உயர் நீதிமன்றம்
Published on

ராஞ்சி:

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்தித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக லாலுவுக்கு ராஞ்சி சிறைத்துறை பரோல் வழங்கியது. 

பின்னர் லாலுவின் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி, 12 வார கால ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவைப் பரிசீலித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், அவருக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து டெல்லி மற்றும் பெங்களூரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லாலுவுக்கு, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் லாலுவின் ஜாமீன் ஜூன் 27-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது உடல்நிலை இன்னும் பூரணமாக குணமடையாததால் ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், லாலுவுக்கு ஜூலை 3-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluBail

X

Maalai Malar
www.maalaimalar.com