

லாலாபேட்டை:
லாலாபேட்டையை அடுத்த கம்மநல்லூரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் யோகேஸ்வரன்(வயது 20). கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கூரையில் தூக்குப்போட்டு கொண்டு உயிருக்கு போராடினார். அப்போது அருகில் உள்ளவர்கள் இதனை கவனித்து யோகேஸ்வரனை கீழே இறக்கி குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை யோகேஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.