லாலாப்பேட்டை அருகே சிமெண்ட் லாரி மோதி வாலிபர் காயம்

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை மேட்டுமகாதானபுரம் பிரிவு சாலையில் சிமெண்ட் லாரி மோதி வாலிபர் காயம் அடைந்தார்.
லாலாப்பேட்டை அருகே சிமெண்ட் லாரி மோதி வாலிபர் காயம்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் திரு ஈங்கோயமலையை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் கார்த்திக் (வயது 28) புலியூர் சிமெண்ட் ஆலையில் வேலை செய்து வருகிறார்.

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை மேட்டுமகாதானபுரம் பிரிவு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேடசந்தூரை சேர்ந்த காமராஜ் மகன் முருகேசன் (27) ஒட்டி வந்த சிமெண்ட் லாரி திடீரென பைக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com