பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது- எல் முருகன்

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.
எல் முருகன்
எல் முருகன்
Published on

சென்னை:

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 

பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். இந்த அநாகரிக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பணியின் குணமே காவி, என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com