குருபரப்பள்ளி அருகே மின் சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது

குருபரப்பள்ளி அருகே மின் சாதன பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே உள்ள பண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 71). விவசாயி. இவரது தோட்டத்தில் பாசனத்திற்காக ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் அமைத்திருந்தார். சம்பவத்தன்று இவரது விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டார் உள்ளிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து முனுசாமி குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (21) என்பதும், முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின்சாதன பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com