குருபரப்பள்ளியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

குருபரப்பள்ளியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை
கொள்ளை
Published on

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜன் (வயது 59). இவர், அதே பகுதியில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு 1 மணி அளவில், இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு சென்று பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பெட்டியில் வைத்திருந்த ரூ.54 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதே போல் இவரது கடையின் அருகே உள்ள பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.1,000-த்தை திருடிச் சென்றனர். அதே பகுதியில் மேலும் ஒரு மளிகை கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com