குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை நடைபெற்றது.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விநாயகர், நாராயணர், அம்மன், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருமால் பூஜையின் போது அம்மன் தங்க திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

தொடர்ந்து இரவு சுவாமி-ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருடன் சப்பர வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் வில்லிசை நிகழ்ச்சியும், பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து அம்மன் வழிபாடும், வானவேடிக்கைகளும் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கடைசி நாளான இன்று கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெயமுருகன், சேர்மதங்கம், மோகனா, குரங்கணி 60 பங்கு நாடார்கள்,சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த முத்துமாலை, ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், ஜெயசங்கர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் ஊழியர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com