குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Kuranganiforestfire #assemblyresolution
குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
Published on

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்ட சபைக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

காலை 10 மணிக்கு அவை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனகேரன், ஜான்ஜேக்கப், ராஜாங்கம், கந்தசாமி, ஆண்டிவேல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது. #Kuranganiforestfire #assemblyresolution #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com