குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்தார் - பலி எண்ணிக்கை 21 ஆனது

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி இன்று உயிரிழந்த நிலையில் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. #TheniFire #KuranganiForestFire
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்தார் - பலி எண்ணிக்கை 21 ஆனது
Published on

சென்னை:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் சென்னை மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த 36 பேர் கடந்த 11-ந் தேதி மலையேற்ற பயிற்சிக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். 

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் சிலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யமிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவரது தலைமையிலான குழுவினர் இன்று போடி வந்தனர். அங்கிருந்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி பின்னர் குரங்கணி தீ விபத்து குறித்து கொழுக்கு மலை வனப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளித்தது, மீட்பு பணியில் ஈடுபட்ட வனத்துறை, தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், காட்டுத் தீயில் தப்பி காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர். தீ விபத்துக்கான காரணம், மீட்பு பணிகள், எதிர் காலத்தில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பது, மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டியவை உள்ளிட்ட அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

போடியில் தொடர்ந்து 2 மாதம் விசாரணை நடத்த உள்ளதால் போடி தாலுகா அலுவலகத்தில் இந்த குழுவினருக்கு தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை வானகரம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த பார்கவி என்ற பெண் சிகிச்சை பலினின்றி இன்று உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. #TheniFire #KuranganiForestFire #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com