ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 வீரர்கள் வீரமரணம்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள அரம்போரா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நேற்று மாலை முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இன்று பிற்பகலில் ஹல்மத்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 வீரர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த மேலும் 3 வீரர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் மொத்தம் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இதில் 3 ராணுவ வீரர்களும், 2 போலீசாரும் அடங்குவர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com