குன்னத்தூரில் சாலையில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் மாவட்ட எல்லை குன்னத்தூரில் சாலையில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சாலையில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

திருப்பூர் மாவட்ட எல்லை குன்னத்தூர். இங்குள்ள நால்ரோடு வழியாக திருப்பூர், அவினாசி, கோபி, பெருந்துறை செல்லலாம். மேலும் தூத்துக்குடியிலிருந்து சரக்குகள் ஏற்றிக்கொண்டு மைசூரு செல்லும் லாரிகளும், மைசூர், தாளவாடி, கொள்ளேகால், ஆசனூர், சத்தி, கடம்பூர், அந்தியூர் பகுதிகளிலிருந்து காய்கறிகள், தக்காளி, வாழைதார்கள் ஏற்றிக்கொண்டு திருப்பூர், மதுரை, ஒட்டன்சத்திரம் செல்லும் லாரிகள் தினமும் குன்னத்தூர் வழியாகத்தான் சென்று வருகிறது.

இவ்வளவு போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில், குன்னத்தூர் பஸ்நிலையம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டினார்கள். அதன்பின்னர் அந்த குழியை சரிசெய்யாமல் அப்படியே போட்டு விட்டனர். இந்த வழியாக பகலில் வரும் வாகனங்கள் அருகில் இருப்பவர்களிடம் வழி கேட்டு, மாற்று பாதையில் சென்று விடுகிறார்கள்.

ஆனால் இரவில் வரும் கனரக வாகனங்கள் வழி தெரியாமல் விடிய விடிய காத்திருக்க வேண்டியுள்ளது. குறுகிய சாலையில் பஸ், லாரிகள் செல்வதால் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் பெரும் சிரமப்படுகிறார்கள். ஆகவே குடிநீர் இணைப்பை விரைவில் முடித்து சாலையை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com