குன்னத்தூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் கணவர் தற்கொலை

குன்னத்தூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் மனவேதனை அடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னத்தூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் கணவர் தற்கொலை
Published on

குன்னத்தூர்:

குன்னத்தூர் அருகே கருக்குபாளையம் நெசவாளர் காலணியைச் சேர்ந்தவர் வடிவேல் இவருக்கு பெரியசாமி (வயது 27) பிரபு (வயது 26) இரண்டு மகன்கள் உள்ளனர்.

வடிவேல் மற்றும் பெரியசாமி குடும்பத்தினர் கேரளாவில் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்கள். பிரபு கருக்குபாளையம் நெசவாளர் காலணியில் இருந்து கொண்டு பால் வியாபாரம் செய்து வருகிறார்.

பிரபுவிற்கு கவுதமி என்ற மனைவியும் 6 வயது 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். கவுதமி பனியன் கம்பெனி வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் பிரபுவின் அண்ணன் மனைவிக்கும் கவுதமிக்கும் தகராறு ஏற்பட்டதில் கவுதமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது அம்மா வீடான ஈரோடு மாவட்டம் நம்பியூருக்கு சென்று விட்டார் மேலும் தனது கணவர் பிரபுவை மாமியார் வீட்டிற்கு வந்து விடும் படி கூறி வந்துள்ளார்.

இதில் மனவேதனை அடைந்த பிரபு நேற்று முந்தினம் இரவு வி‌ஷ மாத்திரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து, பிரபுவின் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com