குன்றத்தூரில் காண்டிராக்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

குன்றத்தூரில் காண்டிராக்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த இரண்டாம்கட்டளை பெசில் கார்டன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணய்யா, கட்டிட உள் அலங்கார காண்டிராக்டர்.

இவரது வீட்டில் ஏ.சி. பயன்பாட்டால் கடந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் ஒரு வாரமாக கிருஷ்ணய்யா குடும்பத்துடன் மொட்டை மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கினார்.

இன்று அதிகாலையில் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் ஆட்கள் நடமாட்டம் சத்தம் கேட்டு எழுந்த கிருஷ்ணய்யா கதவை திறக்க முயன்றார்.

அப்போது கதவு வெளிபக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார்.

பின்னர் கதவை திறந்து கீழே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். கிருஷ்ணய்யா குடும்பத்துடன் மொட்டை மாடிக்கு சென்று தூங்குவது நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com