குன்றத்தூரில் போதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை

குன்றத்தூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூரில் போதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூர் மாணிக்கவாசகர் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (69). இவருக்கு 2 மகன்கள். ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

பாண்டியன் தனது மகன்கள், மருமகள்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

ஒரு மகன் நாகராஜ் (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு குழந்தையும், 40 நாட்களில் ஒரு கைக்குழந்தையும் உள்ளன.

நாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று நாகராஜ் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

அதை பார்த்து கொண்டிருந்த கணேசன் தனது மகனை கண்டித்துள்ளார்.

இதையடுத்து கணவன்- மனைவிக்குள் நடந்த சண்டை தந்தை-மகனுக்குள் தொடங்கியது. அப்போது ஆத்திரம் அடைந்த பாண்டியன் அங்கு இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மகனை குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com