குன்றத்தூரில் ஆட்டோ டிரைவர் படுகொலை

வீட்டில் தூங்கிய ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூரில் ஆட்டோ டிரைவர் படுகொலை
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று காலை மது போதையில் இருந்த அவர் ஆட்டோ ஓட்டச் செல்லாமல் வீட்டிலேயே தூங்கினார்.

இதையடுத்து தேவி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள அறையில் கணவர் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் கல் போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த போது ராஜேந்திரனின் மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கும், மகன் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களிடம் விளையாடவும் சென்றுவிட்டனர். இதனால் கொலையாளிகள் வீட்டுக்கு வந்து சென்றது எப்போது என்று தெரியவில்லை.

கொலையுண்ட ராஜேந்திரனின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தேவியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதே போல் தேவியும் முதல் கணவரை பிரிந்து ராஜேந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்ல. பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுதொடர்பாக தேவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடிக்க விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com