பெரும்பள்ளம்-வரட்டுப்பள்ளம்-குண்டேரிபள்ளம் அணைப்பகுதிகளில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழைகொட்டிவருகிறது. நேற்றுமாலைமற்றும் இரவும் மழை பெய்தது.
பெரும்பள்ளம்-வரட்டுப்பள்ளம்-குண்டேரிபள்ளம் அணைப்பகுதிகளில் பரவலாக மழை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைப் பகுதிகளான அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை, டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 46 மி.மீ., பெரும்பளளம் அணைப் பகுதியில் 24 மி.மீ. குண்டேரிபள்ளம் அணைப்பகுதியில் 12மி.மீ.,கொடிவேரி அணைப் பகுதியில் 12.2மி.மீ. மழையும் பெய்தது.

இந்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வருகை இல்லாவிட்டாலும் வனப் பகுதி உள்ளே நீரோடை களில் தண்ணீர் ஓடுகிறது. வன விலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com