குண்டடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குண்டடம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

குண்டடம்:

குண்டடத்தை அடுத்துள்ள மானூர்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் காளிமுத்து, இவரது மகன் மணியன் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாயார் இப்படி குடித்து விட்டு சுற்றுகிறாயே என திட்டியதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மணியன் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com