

சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் மாநிலம் மனாலியில் உள்ள குல்லு கிராமத்தில் கடந்த வாரத்திலிருந்து பனிப்பொழிவு தொடங்கியது. பனிக்காலம் தொடங்கி வெகு நாட்கள் ஆகியும் பனிப்பொழிவு மிக தாமதமாக ஏற்பட்டதால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.
இது குறித்து பேசிய கிராம மக்கள், ‘மழை மற்றும் பனிப்பொழிவு குறைவாக ஏற்படுவதற்கு காரணம் இணையத்தின் பயன்பாடு. மழை எப்போது பெய்யும் என்பதை அனைவரும் இணையத்தையும், டிவியையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர். ஆனால் அதற்கு முன் வருண பகவானுக்கு பூஜைகள் செய்து மழை பெய்யும் காலத்தை கணிப்பர். இப்போது இணையங்களை பயன்படுத்துவதால் கடவுள் கோபமாக உள்ளார். அதனால் தான் மழை குறைவாக பெய்கிறது’ என கூறுகின்றனர்.
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் இணையத்தினால் தான் மழை பெய்யவில்லை என கிராம மக்கள் கூறுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.