குளித்தலை அருகே கொரோனா பரிசோதனை முகாம்

குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.
கொரோனா பரிசோதனை முகாம்
கொரோனா பரிசோதனை முகாம்
Published on

குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவகுமார் தலைமை தாங்கி கொரோனா மற்றும் டெங்கு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் போன்றவை வழங்கப்பட்டன. மேலும் சுமார் 79 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அரசு மருத்துவர் மோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com