ஜம்மு காஷ்மீர் -குல்காம் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் என்கவுண்டர்
குல்காம் என்கவுண்டர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் இன்று காலை விரைந்து சென்றனர்.  

பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனாலும், அங்கு துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4வது பயங்கரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டான் என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில், சமீபத்தில் பொதுமக்கள் 3 பேரைக் கொன்ற பயங்கரவாதிகள் இவர்கள்தான் என தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com