சுல்தான்பேட்டையில் கொதிக்கும் குழம்பு கொட்டியதில் சமையல் மாஸ்டர் உடல் வெந்து பலி

சுல்தான்பேட்டையில் கொதிக்கும் குழம்பு கொட்டியதில் ஓட்டல் தொழிலாளி உடல் வெந்து பலியானார்.
சுல்தான்பேட்டையில் கொதிக்கும் குழம்பு கொட்டியதில் சமையல் மாஸ்டர் உடல் வெந்து பலி
Published on

வில்லியனூர்:

புதுவை சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 40). இவர் சுல்தான் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று ஓட்டலில் பெரிய பாத்திரத்தில் சிக்கன் கிரேவியை தயார் செய்து அதனை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி சிக்கன் கிரேவி நூர் முகமதுவின் உடலில் கொட்டியது. இதில், உடல் முழுவதும் வெந்து வலியால் துடித்த அவரை ஓட்டல் தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு நூர்முகமது பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடல் வெந்து பலியான நூர் முகமதுவுக்கு மும்தாஜ் பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com