குடவாசலில் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை

குடவாசலில் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

குடவாசல்:

குடவாசல் அருகேயுள்ள சித்தாடி, வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் அன்பரசன் (40). இவர் திருவாரூர் தாலுக்கா, போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், இவரது தாயார் மாரியம்மாளுக்கும் வீடுகட்ட இடம் கேட்டதில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அன்பரசன் வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி ரேவதி கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடக்கிறது.

இறுதி நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் துரை, நன்னிலம் டி.எஸ்.பி திருக்குமரன், மற்றும் போலீஸ் அதிகாரிகள் அன்பரசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com