குடவாசலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு- ஒருவர் கைது

குடவாசலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குவளங்காட்டு தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் மோகன் (வயது23). சம்பவத்தன்று இவர் குடவாசல் பஸ் நிலையம் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடவாசலை சேர்ந்த மாணிக்கம் மகன் காளிதாஸ் (30) அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோகன், காளிதாசிடம் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து காளிதாஸ் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் உடனடியாக பஸ் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் மோகனை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மோகனை கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com