குடவாசல் அருகே விவசாயி தற்கொலை

குடவாசல் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவாரூர்:

குடவாசல் போலீஸ் சரகம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது52). விவசாயி. அவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுகந்தி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் கடந்த 5 வருடங்களாக தனியே வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து சங்கர் மது போதைக்கு அடிமையானாராம். இந்நிலையில் சம்பவத்தன்று மனமுடைந்த அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபற்றி அவரது உறவினர் தங்கையன் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com