குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

குடவாசல் அருகே மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

குடவாசல்:

குடவாசல் அடிசேரி தெருவைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது55). இவர் அகரஓகையிலிருந்து குடவாசல் கடைத் தெருவிற்கு மளிகை சாமான் வாங்க நடந்து வந்தபோது தெற்கே வகையை சேர்ந்த ராஜ்குமார்(31) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சத்தியமூர்த்தி மருமகன் மாமலைவாசா கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com