அனிதா மரணத்தில் சந்தேகம்: நீதி விசாரணை நடத்தக்கோரி முதலமைச்சரிடம் கிருஷ்ணசாமி மனு

மாணவி அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
அனிதா மரணத்தில் சந்தேகம்: நீதி விசாரணை நடத்தக்கோரி முதலமைச்சரிடம் கிருஷ்ணசாமி மனு
Published on

சென்னை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர் கூறியதாவது:-

மாணவி அனிதா மரணம், கொலையா தற்கொலையா? என்பது குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். மாணவி அனிதாவின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய நீதி விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவி அனிதா உச்ச நீதிமன்றம் வரை செல்ல தி.மு.க.வினர் உதவினர். மாணவி அனிதா தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

அனிதா மரணம் போன்று தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. கீழ்த்தரமான அரசியலை செய்ய மாணவி அனிதா பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com