கிருஷ்ணகிரியில் இளம்பெண் தற்கொலை

கிருஷ்ணகிரியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டி.கே.ஜி. நகர், சந்தைபேட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகள் லைலா (வயது 17). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதே போல் நேற்று முன்தினமும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லைலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com