மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் கடத்தல்
மணல் கடத்தல்
Published on

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை போலீசார் பெலவர்த்தி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த ஒரு டிராக்டரை போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர், உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com