கிருஷ்ணகிரியில் சிறுத்தை புலியை கொன்ற விவசாயி

கிருஷ்ணகிரியில் சிறுத்தை புலியை விவசாயி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் சிறுத்தை புலியை கொன்ற விவசாயி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே மலைப்பகுதி உள்ளது. இங்கு ராமமூர்த்தி (வயது 62) என்ற விவசாயி 6 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை காட்டுப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. இந்த சிறுத்தைப்புலி ராமமூர்தி வளர்த்து வரும் பசு மாட்டை தாக்கியது. 

பின்னர் விவசாயியை தாக்க வந்தது. அவர் தன்னை தற்காத்து கொள்வதற்காக அரிவாளால் சிறுத்தை புலியை தாக்கினார். இதில் புலியின் தாடையில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சிறுத்தைப்புலி சுருண்டு விழுந்து இறந்து போனது. இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் புலியை கொன்ற விவசாயி ராமமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com