கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ்

கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த மேலும் 74 பயணிகள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளா விமான விபத்து
கேரளா விமான விபத்து
Published on

புதுடெல்லி:

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் உள்பட 190 பேருடன் கடந்த 7-ந் தேதி இரவு தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகி 2 துண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங், ‘விமான விபத்தில் காயம் அடைந்த 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் உடல்நலம் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com