கோயம்பேடு பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.2½ லட்சம் - நகை கொள்ளை

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.2½ லட்சம்- நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.2½ லட்சம் - நகை கொள்ளை
Published on

போரூர்:

வந்தவாசி காதர் மீரா தெருவைச் சேர்ந்தவர் நிஜாமுதீன். கோரை பாய் வியாபாரி. இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு பின்னர் வந்தவாசி திரும்புவதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

அப்போது அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த இரண்டு வாலிபர்கள் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு அதை எடுத்து தருமாறு நிஜாமுதீனிடம் கூறினார்கள்.

அவர் குனிந்து பணத்தை எடுத்தபோது 2 வாலிபர்களும் நிஜாமுதீன் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம், 12 பவுன் நகை இருந்தது.

இதுகுறித்து நிஜாமுதீன் கோயம்பேடு பஸ் நிலையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com